பம்பை நதிநீரை மூலமாக கொண்டு காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டம் குறித்து பேசக்கூட ஆளில்லாத நிலை இருப்பதாக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கவலை தெரி

பம்பை நதிநீரை மூலமாக கொண்டு காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டம் குறித்து பேசக்கூட ஆளில்லாத நிலை இருப்பதாக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கவலை தெரி
X
பம்பை நதிநீரை மூலமாக கொண்டு காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டம் குறித்து பேசக்கூட ஆளில்லாத நிலை இருப்பதாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கவலை தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 60 ஆயிரம் ஹெட்டர் பரப்பளவு பாசன நிலம் பயன்படக்கூடிய பம்பை நதிநீரை மூலமாக கொண்டு காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டம் குறித்து பேசக்கூட ஆளில்லாத நிலை இருப்பதாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கவலை தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோலை சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியை சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தனபாலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மா.பா. பாண்டியராஜன் பேசும்போது, மாணவ மாணவிகளின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழிலுக்கு உதவ தயாராக இருப்பதாகவும், பெரியார் மாவட்டமான விருதுநகரில் உள்ள சுமார் 60,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள பாசன நிலம் பயனடைய கேரளாவில் உள்ள பம்பை நதியின் உபரிநீரை மேற்கு தொடர்ச்சி மலை வழியாக குடைந்து கிழவன் கோயில் பகுதியில் அணை கட்டினால் விருதுநகர் ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் குடிநீர் தேவையில் பூர்த்தி செய்யவும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட அழகர் அணை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பேசுவதற்கு கூட தற்போது ஆளில்லை என கவலை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அழகர் அணை திட்டம் நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி முன்னெடுத்த கட்சியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Next Story