முதல்வர் திறந்து வைத்த புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

முதல்வர் திறந்து வைத்த புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
X
முதல்வர் திறந்து வைத்த புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி எம் பி ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
ராஜபாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட காந்திஜி நூற்றாண்டு நினைவு பழைய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் - முதல்வர் திறந்து வைத்த புதிய பேருந்து நிலையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தென்காசி எம் பி ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ளும் நோக்கில் துறை சார்ந்த அனைவரும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ரெட் அலர்ட் மட்டும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் நானும், முதல்வரும் தொடர்பு கொண்டு உயிர் சேதம் இல்லாமல் மழையை சந்திக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு எந்த அசம்பாவிதமும் தற்போது வரை நடக்கவில்லை. தற்போது திறக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் போதுமான கழிப்பறை வசதி மற்றும் மின்சார வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
Next Story