சிவகிரியில் பெண்ணிடம் நகைகளை பறித்து கொல்ல முயற்சி: தாய், மகள் கைது

X
தென்காசி மாவட்டம் சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி வயது 50. இவருக்கு சொக்கநாதன்புத்தூரை சேர்ந்த மாரி என்ற பூ மாரி வயது 40 என்ற பெண்ணுக்கும் முன் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வி தனியாக இருக்கும்போது, மாரி என்ற பூ மாரியும், அவரது மகள் மதுமிதாவும் சேர்ந்து செல்வியின் கழுத்தில் கிடந்த செயின் உள்ளிட்ட மூன்று பவுன் தங்க நகைகளை பறித்து, செல்வியை துப்பட்டால் கொல்ல முயற்சி செய்து தப்பி ஓடினர். இது தொடர்பாக புகாரின் பேரில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் மேற்பார்வையில் சிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் உதவி ஆய்வாளர் வரதராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த மாரி என்ற பூ மாரியையும், அவரது மகள் மதுமிதாவையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

