திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  நள்ளிரவில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
X
திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, இரவுப்பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை குறித்தும், மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள், நோயாளிகளை கவனிக்கும் விதம், சிகிச்சைக்கு பிறகான தற்போதைய நிலை, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story