திருவேங்கடம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பேரூராட்சி அலுவலகத்தில், 15 வார்டு பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள சொத்து வரி வசூல் செய்ய வேண்டும். பேரூராட்சி பகுதியில் சமுதாய மற்றும் பொதுக் கழிப்பறைகளை சீரமைத்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பேரூராட்சி அலுவலர் சுதா, பேரூராட்சி தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் சேர்மதுரை உள்ளிட்ட ஏராளமான பெண் வார்டு கவுன்சிலர்களின் கணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

