தூக்கி வீசப்பட்ட மேற்கூரையின் தகரங்கள்

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாகவே பலத்த சூறைக்காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் பல்வேறு சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மரங்கள் முறிந்து விழுந்தது வருகிறது. தற்போது கொடைக்கானல் இந்திரா நகர் பகுதியில் அமைந்திருக்கும் அரசினர் ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியின் மேற்கூரை அடித்த சூறை காற்றில் தூக்கி வீசப்பட்டதில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மேல் கூறை முற்றிலும் சேதம் அடைந்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story

