கோடை விழா தூண்டில் மீன் பிடிக்கும் போட்டி

X
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கோடை விடுமுறை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் உள்ளூர் மக்களையும் மகிழ்விக்கும் வகையில் பல போட்டிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் கொடைக்கானல் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக தூண்டில் மீன் பிடிக்கும் போட்டி நடைபெற்றது அதனை தொடர்ந்து இதில் 11 நபர்கள் கலந்து கொண்டனர் நட்சத்திர ஏரியில் காலையில் இருந்து மீன் பிடித்தல் போட்டி நடைபெற்றது கலந்து கொண்ட 11 நபர்கள் நட்சத்திர ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர் ,மேலும் கொடைக்கானலை சேர்ந்த செல்வம் என்பவர் 3.1/2 கிலோ மீன் பிடித்து முதல் பரிசு தட்டி சென்றார், அருமை நாயகம் 3 கிலோ மீன் பிடித்து இரண்டாவது பரிசை பெற்றார், சௌந்தர் என்பவர் அரை கிலோ மீன் பிடித்து மூன்றாவது பரிசு பெற்றார், கொடைக்கானல் சுற்றுலாத்துறை அதிகாரி பரிசுகளை வழங்கினார் மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
Next Story

