மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

X
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏழை எளிய மக்கள் நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுவது வழக்கம். தற்பொழுது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா புதிய விதி முறைகளின் படி ஏழை எளிய நடுத்தர மக்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை கடன் வைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமை கண்டித்தும், திண்டுக்கல்லில் இன்று 29.05.25 மாநகரகாங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் சிலையும் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு எதிராகவும் மத்திய நிதி துறை அமைச்சருக்கு எதிராக உன் கோஷங்கள் எழுப்பினர்.
Next Story

