உழவரை தேடி வேளாண்துறை.

மதுரை சோழவந்தான் அருகே உழவர் நலத் துறை திட்டத்தின் உழவரை தேடி நிகழ்வு இன்று நடைபெற்றது.
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட முடுவார்பட்டி மற்றும் தேவசேரி கிராமத்தில் வேளாண் சார்ந்த திட்ட பலன்களை விவசாயிகளின் கிராமத்திற்கு நேரில் சென்று வழங்கும் உழவரைத் தேடி வேளாண்-உழவர் நலத்துறை திட்டத்தின் மூலம் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் இத் திட்டத்தை இன்று (மே.29)சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story