கள்ளழகர் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா

மதுரை கள்ளழகர் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது
மதுரை அருகே அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவ விழா வரும் ஜீன் 2-ந்‌‌ தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா ஜீன் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10 நாட்களும் சுந்தரராஜ பெருமாள், தேவியர்களுடன் புறப்பாடாகி வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story