வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாவிளக்கு எடுத்து நேற்றிக்கடன்

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காளியம்மன் மற்றும் பகவதி அம்மன் வைகாசி உற்சவ விழா நடைபெற்று வருகிறது, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாளான இன்று அம்மன் பூங்கரகம் ஜோடித்து தாரைதப்பட்டைகள், வானவேடிக்கைகள் முழுங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது, அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆதாரனைகள் பூஜைகள் நடைபெற்றது, விழாவின் முக்கிய நிகழ்வாக 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பழங்கால முறைப்படி அலங்கரிக்கப்பட்ட குடம், தட்டு உள்ளிட்ட பாத்திரங்களைக் கொண்டு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, மாவிளக்கு பூஜை செய்து நேற்றிக் கடன் செலுத்தினர். மேலும் தேர்தல் ஆணையத்தால் வழங்கக்கூடிய அடையாள அட்டையில் காளியம்மன், பகவதி அம்மன் என பெயர் பதித்து விளம்பரப்பதாகைகள் வைத்து பக்த்தர்களை கிராம மக்கள் வரவேற்ற விளம்பரப்பதாகை அனைவரையும் கவர்ந்தது.இந்த விழாவில் திண்டுக்கல், மதுரை, கோவை, நெல்லை, சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.
Next Story

