சிவகாசியில் அச்சகத்தின் லிப்டில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

X
சிவகாசியில் அச்சகத்தின் லிப்டில் தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!! சிவகாசி முஸ்லிம் ஓடை தெருவில் வசிக்கும் பாதுஷா- ரம்ஜான்பிவி தம்பதியினரின் ஒரே மகன் முகமது ஆசிப்( வயது 12 ). முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்6-ம் வகுப்பு படித்துவிட்டு 7-ம் வகுப்பு செல்லவுள்ள நிலையில், கோடை விடுமுறை என்பதால் தாய்- தந்தை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் ரம்ஜான்பிவியின் சகோதரியான தனது சித்தியுடன் முகமது ஆசிப் அவர் பணி புரியும் பராசக்தி காலனி சிறுகுளம் கண்மாய்கரை சாலையிலுள்ள தனியார் அச்சகத்திற்கு உடன் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது அச்சகத்தில் இயங்கிக் கொண்டிருந்த திறந்த வெளி லிப்டில் முகமது ஆசிப் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது லிப்டிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த பள்ளி மாணவன் முகமது ஆசிப்பை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கிருந்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தின் பேரில், முதலுதவி சிகிச்சையளித்த நிலையிலும் வரும் வழியிலேயே முகமது ஆசிப் இறந்து விட்டதாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

