மேட்டு ராஜகாபட்டி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா

X
திண்டுக்கல் நகரில் மேட்டுராஜக்காப்பட்டி பகுதியில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு வைகாசி பெருந்திருவிழா கடந்த 20.05.2025 அன்று சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவில் முதல் நாளான இன்று காலை கோவிலிருந்து மேளதாளம் முழங்க பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால்குடம் எடுக்க மலையடிவாரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து கிளம்பிய பால்குட ஊர்வலமானது கோட்டைகுளம் ரோடு, மெயின்ரோடு, வெள்ளை விநாயகர் கோவில், மணிக்கூண்டு, சப் கலெக்டர் ஆபிஸ் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு கரகம் ஜோடித்தல் நிகழ்ச்சியும் 28.05.25 மாலை 6 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதலும்.29.05.25 கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

