ஊட்டியில் இடையறாத கனமழை: குருத்துக்குளி, பசவகல் பகுதிகளில் வீடுகளில் விரிசல் – பொதுமக்களில் அச்சம்

ஊட்டியில் இடையறாத கனமழை: குருத்துக்குளி, பசவகல் பகுதிகளில் வீடுகளில் விரிசல் – பொதுமக்களில் அச்சம்
X
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடையுறாத கனமழை பெய்து வருகிறது.
ஊட்டியில் இடையறாத கனமழை: குருத்துக்குளி, பசவகல் பகுதிகளில் வீடுகளில் விரிசல் – பொதுமக்களில் அச்சம் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடையுறாத கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, ஊட்டி நகரின் புறநகர் பகுதியான நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட குருத்துக்குளி பசவகல் பகுதிகளில் பல வீடுகளில் தடுப்பு சுவர்கள் மற்றும் கட்டட சுவர்களில் பெரிய விரிசல்கள் உருவாகி பொதுமக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன. மழையால் நிலநனைவு அதிகரிப்பு – கட்டடங்களுக்கு பாதிப்பு பொதுவாக மலையோரங்களில் மழைக்காலத்தில் நிலநனைவு அதிகரிக்கும்போது, கட்டடங்களின் அடித்தளத்திலும் சுவர்களிலும் அழுத்தம் ஏற்பட்டு விரிசல்கள் உருவாகும் அபாயம் அதிகமாகும். இப்போதும் அந்த நிலைதான். குருத்துக்குளி பகுதியில் மட்டும் சில வீடுகளில் விரிசல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வீடுகளில் சுவர்கள் முற்றாக பிளந்து வெளியே நீர் ஒழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. “இப்போது நாங்கள் எப்படி இருப்பது?” – பொதுமக்களின் நிலை பசவகல் பகுதியை சேர்ந்த வ பெண் கூறுகையில்இப்போதுதான் சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இரவு தூங்கத்தான் பயமாக உள்ளது. என்றார் தமிழ்நாடு வானிலை மையம் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மேலும் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஊட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்பில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Next Story