கடும் மழையால் இயற்கை சீற்றங்களால் துண்டிக்கப்படும் சாலைகள்:

நீலகிரியில் மாற்றுப்பாதைகளுக்கான தேவை அதிகரிப்பு
கடும் மழையால் இயற்கை சீற்றங்களால் துண்டிக்கப்படும் சாலைகள்: நீலகிரியில் மாற்றுப்பாதைகளுக்கான தேவை அதிகரிப்பு நீலகிரி மாவட்டம், கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் விடாத மழையால் மக்களும், போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெருமழையால் பல முக்கிய சாலைகள் திடீரென சேதமடைந்து, போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் மாற்றுப்பாதைகள் குறித்து தேவைகள் கோரிக்கைகள் எழுந்து வருகிறது நீலகிரியை மற்ற மாநிலம் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள்: உதகை – கூடலூர் நெடுஞ்சாலை கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலை கெத்தை – காரமடை சாலை உதகை கல்லட்டி சாலை குன்னூர் மேட்டுபாளையம் சாலை இந்த 5 சாலைகளும் மழை மற்றும் இயற்கை பேரிடர்களில் பாதிக்கப்படும் முக்கிய சாலைகளாக உள்ளன தற்போது பெய்து வரும் தொடர்மழையால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மழைநீர் பெருக்கால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் அவசர சேவைகள், பள்ளி போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு புதிய பாதுகாப்பான, சீரான மாற்றுப்பாதை அமைப்பது இன்றியமையாத தேவையாக உள்ளது இந்த மாற்றுப்பாதை: தற்போது மழைக்காலங்களில் பாதிக்கப்படும் சாலைகளுக்கு மாற்றாக அமையும் விவசாயப் பொருட்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவ அவசரங்கள் ஆகியவற்றுக்கான சீரான போக்குவரத்துக்கு உதவியாகும் குறைந்த நேரத்தில் சத்தியமங்கலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற சமத்துவ நிலங்களுக்கு பசுமையான, குறுகிய வழியாக பயன்படும் மலைநில மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, கல்வி, மருத்துவ நலன்களுக்கு வழிவகுக்கும் கருத்தில் கொண்டு, கூடலூர் – சிறியூர் – சத்தியமங்கலம் வழியாக ஒரு புதிய, பாதுகாப்பான, சீரான மாற்றுப்பாதை அமைப்பது இன்றியமையாத தேவையாக உள்ளதாக பலரும் கருத்துக்களும் கோரிக்கைகளும் வைத்து வருகின்றனர் இந்த மாற்றுப்பாதை: தற்போது மழைக்காலங்களில் பாதிக்கப்படும் சாலைகளுக்கு மாற்றாக அமையும் விவசாயப் பொருட்கள், சுற்றுலா பயணிகள், மருத்துவ அவசரங்கள் ஆகியவற்றுக்கான சீரான போக்குவரத்துக்கு உதவியாகும் குறைந்த நேரத்தில் சத்தியமங்கலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற சமத்துவ நிலங்களுக்கு பசுமையான, குறுகிய வழியாக பயன்படும் மலைநில மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, கல்வி, மருத்துவ நலன்களுக்கு வழிவகுக்கும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரயில் பாதையை விரிவுப்படுத்த வேண்டும்.சிறியூர் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை அமைக்க வேண்டும் என்பது நீலகிரி. மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு சமவெளி பகுதி என்றால் அது கூடலூரும் தெங்குமரஹாடா தான்.. நீலகிரி மாவட்டத்தில்இருந்து தெங்குமரஹாடா நேரடியாக செல்ல சாலை வசதிகள் இல்லை. மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானிசாகர் வழியாக வந்து தான் தெங்குமரஹாடா செல்ல முடியும். தெங்குமரஹாடா பகுதியை பொறுத்தவரை அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றை கடந்து உள்ளது தெங்குமரஹாடா மலைக் கிராமம் மூன்று பக்கமும் அடர் வனம் சூழ மாயாற்றின் கரையில் இக்கிராமம் உள்ளது. ஆரோக்கியமான பல்லுயிர் பெருக்கச் சூழலை உடைய இந்த கிராமம், யானைகளின் வலசைப்பாதையாக உள்ளதுடன், மாயாற்றில் முதலைகளும், மற்ற வனத்தை விட அதிக அளவில் புலிகள், சிறுத்தை உள்ளிட்ட பல காட்டுயிர்கள் உள்ளன. நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வரும் பகுதியாகும் இந்த பகுதியில் சாலைவசதிகள் கிடையாது. நேரடியாக சிறியூரை இணைத்து அதன் பிறகு கூடலூரையும் இணைக்க முடியும் என்றாலும், அடர்ந்த வனப்பகுதியாகும் இதுதான் சிக்கலுக்கு காரணமாக உள்ளது ஊட்டி அருகேயுள்ள மசினகுடி, மாயார், சிறியூர், ஆனைகட்டி, காங்கிரஸ் மட்டம் ஆகிய பகுதிகள் நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தது. ஆனால், தற்போது இந்த வனப்பகுதி முதுமலை புலிகள் காப்பகம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, சுருள் கொம்பு மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்கின்றன. சிறியூர் பகுதியில் இருந்து மங்களப்பட்டி, தெங்குமரஹாடா வழியாக சத்தியமங்கலத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இச்சாலை அமைத்தால் பந்தலூர், கூடலூர், கேரள மாநிலம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குண்டல்பேட் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள் எளிதில் சத்தியமங்கலத்தை அடைந்து அங்கிருந்து ஈரோடு, கோவைக்கு எளிதாக செல்லலாம் இச்சாலை வனப்பகுதிகளுக்கு நடுவே செல்வதால், இதை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். இச்சாலை அமைத்தால், வன விலங்குகளின் வழித்தடங்கள் மறிக்கப்படுவதோடு அவைகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து இச்சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்காமல் உள்ளது. இத்திட்டம் நிறைவேற சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது ஏனெனில் தெங்குமரஹடாவின் அச்சாணியாக இயங்கிவந்த 'தி தெங்குமரஹடா கூட்டுறவு பண்ணை சங்கம்' செயலிழக்கச் செய்யப்பட்டு கலைக்கப்படும் நிலையில் உள்ளது கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த சுமார் 140 விவசாயிகளை உறுப்பினர்களாகத் கொண்டு 1952 ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்த அந்த சங்கத்தின் நிலங்கள் மீண்டும் அரசே எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் அக்கிராமத்தில் குடியிருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அங்கிருந்து வெளியேற உறுத்தாணை (Order) வழங்கப்பட்டு, அந்த கிராமப்பகுதிகள் முழுவதும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு இணைக்கப்படவுள்ளது. மேலும் அங்கு வசித்து வந்த மக்களுக்கு புலம் பெயர நஷ்ட ஈடு வழங்குவதற்குள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது நீதிமன்றமும் அரசின் இத்திட்டத்தை ஏற்று ஆணை பிறப்பித்துள்ளது. வெகுவிரைவில் இக்கிராமம் பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு புலிகள் காப்பக பகுதியில் இணைக்கப்பட்டு, மனித நடமாட்டம் அப்பகுதியில் தடை செய்யப்படும் நிலையில் உள்ளது. எனவே கூடலூருக்கு இப்பகுதி வழியாக சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே நிதர்சனம் என இயற்கை மற்றும் வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்
Next Story