மூன்று நாட்களாக இருளில் தவிக்கும் நடுவட்டம் பொது மக்கள்

மூன்று நாட்களாக இருளில் தவிக்கும் நடுவட்டம் பொது மக்கள்
X
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் கன மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
மூன்று நாட்களாக இருளில் தவிக்கும் நடுவட்டம் பொது மக்கள் நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி பகுதியில் கன மழை காரணமாக கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு இப்பகுதி மக்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றனர். இப்பகுதியில் அடர்ந்த காடுகள் இருப்பதாலும் உயர்ந்த கற்பூர மரங்கள் நிறைந்து இருப்பதால் மழைக்காலத்தில் அதிக காற்று வீசுவதால் மின்சார கம்பிகள் மேல் மரம் விழுந்து சரிசெய்ய இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றன.மேலும் இப்பகுதியில் மின்சார ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக போதுமான மின் ஊழியர்கள் இல்லை. தற்காலிக ஊழியர்கள் இருப்பதால் மிகவும் கடினமான இடங்களுக்கு சென்று மின்சாரம் துண்டிப்பு சரி பார்க்கின்றனர்... ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இது போன்ற மின்சாரம் துண்டிப்பு தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகிறது.. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக மின்சார துறை அமைச்சர் ஆய்வு செய்து இது போன்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைத்து இப்பகுதி மக்களின் வாழ்க்கையை இருளில் இருந்து மீட்டு ஒளி வெளிச்சத்திற்கு கொண்டு வர உதவி செய்யும்படி இப்பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story