வெளுத்து வாங்கும் தொடர் கனமழை

X
மேல்குந்தாவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியைக் கடந்து தான் அட்டுமண்ணு என்ற ஊருக்குச் செல்ல வேண்டும். பள்ளியின் அருகில் இண்கோ தேயிலை நிறுத்தும் மையம் உள்ளது. இதன் மதில் சுவர் நேற்றைய மழைக்கு இடிந்து பள்ளியின் வளாகத்திற்குள் விழுந்துள்ளது. இதனால் மூன்று வழித்தடத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 1. அட்டுமண்ணு சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.2. பள்ளிக்கு மாணவர்கள் வருகைத் தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 3. இண்கோ தேயிலையை நிறுத்தி கொள்முதல் செய்யும் தளம் அபாயகரமான சூழலில் உள்ளது. 4. சிறுதேயிலை விவசாயிகளும் தினக் கூலிகளும் அந்த வழியாக செல்ல அச்சப்பட்டு வீட்டுலேயே முடங்கி இருக்கிறார்கள். வெள்ள அபாய காலப் பணியாக இந்த இடர்பாடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் என அந்த வட்டாரத்தில் இருக்கும் மேல்குந்தா, அட்டுமண்ணு, கூர்மையாபுரம், அம்பேத்கார் நகர் ஆகிய ஊர்களைச் சார்ந்த பொதுமக்கள் வேண்டுதல் வைக்கிறார்கள்.
Next Story

