தொடர் மழையினால் வாழைத்தோட்டம் சேதம்

X
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகமழை ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட வாழை தார்கள் அறுவடைக்கு சில நாட்களே உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததில் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடைக்கு சில வாரங்கள் உள்ள நிலையில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது . கடன் வாங்கி பயிரிட்டிருந்த நிலையில் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, சேதமடைந்த வாழைகள், பயிா்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.5 கூடுதலாக வழங்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
Next Story

