கோத்தகரி மேட்டுப்பாளைம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் கவர்ந்து இழுக்கும் காட்சி முனை நோக்கி சுற்றுலாப் பயணிகள் பரவசம்

X
கோத்தகரி மேட்டுப்பாளைம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் கவர்ந்து இழுக்கும் காட்சி முனை நோக்கி சுற்றுலாப் பயணிகள் பரவசம் நீலகிரி மாவட்டம், பசுமை மண்டிய காடுகளும், குளிர்ந்த வானிலையும், இயற்கையின் எழில் காட்சிகளும் ஒருங்கே அமைந்துள்ள கோத்தகிரி மேட்டுப்பாலைம் சாலையில், குஞ்சப்பனை சோதனை சாவடி பகுதியில் உள்ள காட்சி முனை சுற்றுலாப் பயணிகளின் மனதை கவரும் இடகாக மாறி வருகிறது. காட்சி முனையின் அழகு வனப்பகுதியின் நடுவில் வளைந்து நெளிந்து ஓடும் பாவானி ஆற்றின் அழகு மேட்டுப்பாளையம் கோவை புறநகரின் நகரின் பரந்து விரிந்த காட்சி மனதை கவரும் அற்புத காட்சிகளாகும்் அதுவும் மாலைநேரங்களில் விளக்குகள் ஔிரும் நேரத்தில் இந்த இடம் ஒரு அற்புத ஆனந்தத்தை தருகிறது இந்த வழியாக பயணிக்கும் பயணிகள், காட்சி முனையை தவறவிடுவதில்லை. இந்த இடம் கடும் குன்றுகளில் இருந்து அகலமாக பரந்து காணப்படும் மலையருகுப் பசுமை தோட்டங்கள், தூய காற்று, நிழல்கொடும் மரங்கள், நேர்பார்வையில் கண்ணைக் கவரும் பள்ளத்தாக்கு காட்சிகள் என பல சிறப்புகளை கொண்டுள்ளது. தற்போது அதிகமான , சுற்றுலாப் பயணிகள் இங்கே தங்களது நினைவுகளைப் பதிவு செய்து வருகின்றனர். பயணிகள் கூட்டம் நாள்தோறும் அதிகரிப்பு வார இறுதி நாட்களிலும், விடுமுறை காலங்களிலும், இப்பகுதிக்கு தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இளைஞர்களும் குடும்பங்களும் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து இந்த இடத்தில் புகைப்படங்கள் எடுப்பதோடு, இயற்கையை அனுபவிக்கின்றனர். வாகன நெரிசலும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சாலை ஓரங்களில் நிற்கின்றன. பொதுமக்களுக்கு வேண்டுகோள் வனத்துறை மற்றும் காவல் துறையினர் இப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் இயற்கையை காப்பாற்றும் விதமாக நடந்துக்கொள்ளவும், சாலையின் பாதுகாப்பை புறக்கணிக்காமல் வாகனங்களை ஒழுங்காக நிறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வளர்ந்துவரும் புதிய சுற்றுலா மையம் காட்சி முனை, இப்போது வரை அரசு முறைபூர்வமாக அறிவிக்கப்படாத சுற்றுலா மையமாக இருந்தாலும், சமீப காலத்தில் அதிக மக்கள் குவிகின்றனர் காட்சி முனை போன்ற இயற்கை வளங்களால் நிரம்பிய இடங்களைப் பாதுகாப்பது நம் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு. சுற்றுலாப் பயணிகள் இனிமையான அனுபவங்களை பெறுவதோடு, அப்பகுதியின் இயற்கையை அழிக்காமல் பயன்படுத்தவேண்டும் என்பது முக்கியமாகும் அதே நேரம் அடிபடைதேவைகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் இந்த காட்சிமுனையில் மழை நீர் தேங்கி நிற்பதால் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை அனுபவிக்க முடியாமல் அவதி படுகிகின்றனர் இந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என.கோரிக்கை விடுத்தனர்
Next Story

