அமீனாபாத் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா

X
அரியலூர் மே.29- உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் இன்று தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாரம் அமீனாபாத் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு அரியலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி வரவேற்று பேசினார் தலைமையேற்று பேசிய அரியலூர் வேளாண்மை இணை இயக்குனர் கீதா விவசாயிகளிடம் வேளாண்மை துறை சார்ந்த மானிய திட்ட விபரங்கள் அதில் பயன் பெறும் வழிமுறைகள் பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார் மேலும் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகள் குறித்தும் பேசினார் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக கலந்து கொண்ட செயற்பொறியாளர் சிவப்பிரகாஷ் விவசாயிகளிடம் மானிய விலையில் வேளாண் உற்பத்தி உபகரணங்கள் மற்றும் கருவிகள் வாங்கும் வழிமுறைகள் மற்றும் திட்ட விபரங்கள் குறித்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்ந்த கோவிந்தராஜ் வேளாண் துணை இயக்குனர் விவசாயிகளிடம் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையில் செயல்படும் திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் குறித்து பேசினார் மதிப்பு கூட்டு செய்யப்படும் வேளாண் உற்பத்தி பொருட்கள் குறித்தும் விவசாயிகளிடம் கூறினார் மீன்வள ஆய்வாளர் பார்த்திபன் விவசாயிகளிடம் மீன்வளத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கூறினார் அதனைத் தொடர்ந்து கார்த்திக், வேளாண்மை அலுவலர் வேளாண் விற்பனை துறை மூலம் இ-நாம் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வழிமுறைகள் பற்றி விவசாயிகளிடம் கூறினார் கூட்டுறவுத் துறையின் சார்பாக கூட்டுறவு சார்பதிவாளர் கனிமொழி விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன்கள் குறித்தும் மேலும் கறவை மாடுகளுக்கும் , வேளாண் கருவிகளுக்கும் வழங்கப்படும் கடன்கள் குறித்தும் விவசாயிகளிடம் பேசினார் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கலந்து கொண்ட கார்த்திகேயன் கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தார் மேலும் தீவனப் பயிர்களின் ரகங்கள் அதன் பயன்பாடுகள் பற்றியும் கூறினார் தோட்டக்கலைத் துறை சார்பாக கலந்து கொண்ட தர்மலிங்கம் உதவி தோட்டக்கலை துறை அலுவலர் அவர்கள் விவசாயிகளிடம் தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். இந்நிகழ்ச்சியில் அட்மா திட்டத்தின் கீழ் கலாஜதா (தெருக்கூத்து) மூலம் வேளாண்மை மற்றும் சகோதரத்துறை சார்ந்த திட்டங்கள் அதில் பயன் தரும் வழிமுறைகள் பற்றியும் நில உடமை பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளிடம் கலை நிகழ்ச்சி மூலம் கூறினார்கள். மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜென்சி விவசாயிகளிடம் மண் பரிசோதனை செய்யும் வழிமுறைகள் அதன் முக்கியத்துவம் அதனால் உண்டாகும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். வேளாண்துறையின் மூலம் விவசாயிகளுக்கு உளுந்து விதையில் விதை நேர்த்தி செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் வேளாண்மை துறை மற்றும் சகோதரத்துறைகளின் உள்ள இடுபொருட்கள் விதைகள் நுண்ணீர் பாசன கருவி முதலியன விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐந்து விவசாயிகளுக்கு சுமார் ரூ7ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் வழங்கப்பட்டது இறுதியாக ராதாகிருஷ்ணன் வேளாண்மை துணை இயக்குனர் நேர்முக உதவியாளர், (பொ) கலந்து கொண்ட அலுவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் நன்றியுரை கூறினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்
Next Story

