தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்!

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்!
X
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 4 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பாடப் பிரிவுகள் குறித்து அறிந்து கொள்ள திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 9965291516 என்ற எண்ணிலும், திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (மகளிா்) 9499055763 என்ற எண்ணிலும், ஒட்டன்சத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 9025155088 என்ற எண்ணிலும், குஜிலியம்பாறை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 9600827733 என்ற எண்ணிலும், திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 0451-2970049 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
Next Story