காளையார்கோவிலில் டீ வாங்கியவருக்கு அதிர்ச்சி

X
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இன்று டீ அருந்த வந்த ஒருவர், டீ விலை 15 என குறிப்பிட்டிருந்த நிலையில் டீக்கு ₹18 பில் பெற்றுள்ளனர். இது தொடர்பாக உணவகத்தில் கேள்வி எழுப்பியபோது, "கண்ணாடி டம்ளரில் டீ ₹15, ஆனால் சில்வர் டம்ளரில் டீ ₹18" என உணவக நிர்வாகம் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது
Next Story

