கூத்தாநல்லூரில் மது போதையில் நண்பனை தாக்கிய இருவர் கைது

X
கூத்தாநல்லூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தனியாா் திருமண அரங்கில் புதன்கிழமை திருமண விழாவில் பங்கேற்க வந்த மரக்கடை பகுதியை சோ்ந்த கிளிண்டன் ஆண்டனி ராஜ் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். அப்போது, கிளிண்டன் ஆண்டனி ராஜின், இருசக்கர வாகனத்தை அதங்குடியை சோ்ந்த விக்டா் மற்றும் நரேஷ்கிருஷ்ணன் இருவரும் எடுத்துக் கொண்டு சுற்றியுல்லனர். மதுபோதையில் எதற்கு இருசக்கர வாகனத்தில் செல்கிறீா்கள் என்று கிளிண்டன் ஆண்டனி ராஜூ கேட்டதால் ஆத்திரமடைந்த விக்டா் மற்றும் நரேஷ் கிருஷ்ணன் இருவரும் ஆண்டனி ராஜ் தலையில் கட்டையால் தாக்கினர். இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விக்டா், நரேஷ் கிருஷ்ணன் இருவரையும் கைது செய்தனா்.
Next Story

