அரசு சார்பில் கடமைக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டிகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்புகளை இழந்த அரசு பள்ளி மாணவர்கள்

X
Komarapalayam King 24x7 |29 May 2025 8:35 PM ISTகுமாரபாளையத்தில் அரசு சார்பில் கடமைக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாமல், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவாய்ப்புகளை இழந்த அரசு பள்ளி மாணவர்கள்
குமாரபாளையத்தில் அரசு சார்பில் கடமைக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாமல், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் இயக்கப்படும், இந்திய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலர் அரவிந்த் கூறியதாவது: குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான முறையில் தகவல் தர முடியாமல், மாநில அளவிலான போட்டியில் சுமார் 120 மாணவ, மாணவியர் ,மட்டுமே பங்கேற்றனர். குமாரபாளையத்தில் நடைபெறும் இந்த போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தகவல் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் தகவல் தராததால், அவர்களால் பங்கேற்க முடியாமல், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். இது போன்ற அறிவிப்புகளை மத்திய அரசு அதிகாரிகள், கோடை விடுமுறைக்கு முன்பு கொடுத்திருந்தால், பெருமளவிலான மாணவ, மாணவியர் பங்கேற்று இருப்பார்கள். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க, பெயர்களை பதிவு செய்திட மே. 31, என்பதால், அவசர கதியில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இனி வரும் காலங்களில், கோடை விடுமுறைக்கு முன்பே தகவல் கொடுத்து, மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பொ) ஜெயலட்சுமி, நாமக்கல் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
