விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுதர வந்தவர்களையும் தடுத்து கைது செய்தும், விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் டில்லிபாபு மற்றும் சம்பத் அவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி ஏ.ஐ.கே.எஸ் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுதர வந்தவர்களையும் தடுத்து கைது செய்தும், விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் டில்லிபாபு மற்றும் சம்பத் அவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி ஏ.ஐ.கே.எஸ் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொது செயலாளர் சாமி. நடராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் டில்லிபாபு,முன்னாள் நகர்மன்ற தலைவர் ப.சுந்தரராஜன்,மாநில செயலாளர் துளசி நாராயணன்,மாவட்ட செயலாளர்கள் கோபால்,சம்பத்,மாவட்ட பொருளாளர் பெருமாள்,மாவட்ட துணை தலைவர் தமிழரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுதர வந்தவர்களையும் தடுத்து கைது செய்தும், விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் டில்லிபாபு மற்றும் சம்பத் அவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரியும்,NH 205 (சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை) திட்டத்திற்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு 13 ஆண்டுகள் ஆகியும் உரிய நட்ட ஈடு தராத போக்கு, கலெக்டர் அலுவலக வாசலில் ஓரமாக நின்ற விவசாயிகளை அப்புறப்படுத்தியது, மெய்யூர் கிராமத்தில் பட்டா நிலத்திலும் சங்க கொடி ஏற்ற தடை விதித்தது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஏ.ஐ.கே.எஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story




