குமரி கலை விழா அமைச்சர்  துவக்கி வைத்தார்

குமரி கலை விழா அமைச்சர்  துவக்கி வைத்தார்
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம், திரிவேணி சங்கமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் குமரி கலை விழா நடைபெற்றது. நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி தலைமை வகித்தார்.   பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்:-     இந்த  கலை விழா நிகழ்ச்சி நடை பெறுவதன்மூலம் பாராம்பரிய கலைகளுக்கும். நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க முடியும். பல்வேறு நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை கண்டுகளிப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். இவ்வாறு  பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்  பேசினார்கள்.     தொடர்ந்து  சின்னத்திரை நடிகர்கள், இசை கலைஞர்கள், பரதநாட்டிய குழுவினர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மேளதாள குழுவினர் உள்ளிட்டோர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் பாடல்கள், ஆடல் பாடலுடன் குமரி கலைவிழா முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்திய கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்கள். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ்,  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்
Next Story