ஆலயத்தில் ஆண்,பெண் திருட்டு முயற்சி

X
குமரி மாவட்டம் வாள்வச்ச கோஷம் பேருராட்சி அலுவலகம் அருகே குன்னபாறை ஸ்ரீ வனசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. தினமும் காலை நேரம் பூஜை நடைபெற்று வரும் இந்த கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை செயலாளர் அனில் இன்று ஆய்வு செய்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த ஆண் மற்றுமொரு பெண் ஆகிய இரண்டு பேர் கோயிலின் நுழைவு வாயிலை திறந்து உள்ளே வந்து காணிக்கை பெட்டியை உடைக்க முயர்சிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து கண்காணிப்பு கேமரா இருப்பதை கவனித்து, இருவரும் நைசாக அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சிசிடிவி காட்சிகளுடன் தக்கலை காவல்நிலையத்தில் கோவில் செயலாளார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

