கடற்கரையில் கண்டெய்னர்  கரை ஒதுங்கியது

  கடற்கரையில் கண்டெய்னர்  கரை ஒதுங்கியது
X
கன்னியாகுமரி
கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்ற லைபீரியா  நாட்டு சரக்கு கப்பல் ஒன்று கடந்த 24 ஆம் தேதி ஆழ்கடலில் மூழ்கியது. அதில் கால்சியம் கார்பனேட் பிளாஸ்டிக் மூல பொருள்கள் உட்பட பல்வேறு பொருட்கள்  640 கண்டெய்னர்களில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த கண்டெய்னர்கள் பல இடங்களில் கரை ஒதுங்கியது.        கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தேங்கா பட்டணம் அருகே  இனயம், இரயுமன் துறை போன்ற பகுதிகளில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியது. இதில் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்  காணப்பட்டது. இதை மாவட்ட கலெக்டர் சென்று பார்வையிட்டார்.       இந்த நிலையில் இன்று மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை கடற்கரை பகுதியில் சாக்கு மூடைகள் ஒதுங்கியது. உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலையம் மற்றும் மரைன் போலீசார்,  கலெக்டர் உட்பட சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பார்வையிட்டனர்.     அடுத்து வாணிய குடி கடற்கரை பகுதியில் கண்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கியது.  பொதுமக்கள் யாரும் அருகில் சொல்லக்கூடாது என தடுப்பு நடக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவலை அடுத்து அந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளம் பேர் குவிந்ததனர்.
Next Story