தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களின் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

எதிரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள்* வெகுவாக பாராட்டினார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களின் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மணல் திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட *
1.அன்பழகன் 36/25 த/பெ பெரியசாமி, ஆதிதிராவிடர் தெரு, எளம்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம். 2.அறிவழகன் (34) த/பெ பெரியசாமி ஆதிதிராவிடர் தெரு, எளம்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம் ஆகியோர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க,ஆதர்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Next Story