விவசாயி கிணற்றுக்குள் ண தவறி விழுந்து பலி

X
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் (50) இன்று பகல் வேளையில், அவருக்கு சொந்த வயல்காட்டில், தற்போது வீசி பலத்த காற்றால் அங்கிருந்த வாழை மரங்கள் சாயத் தொடங்கி உள்ளது. இதை முருகேசன் அவற்றை நிமிர்த்து கட்ட கயிறை கொண்டு, அருகில் இருந்த கிணற்றின் சுற்றுஅருகில் இருந்த கிணற்றின் சுற்று சுவரில் இருந்த கம்பியில் கட்ட முயற்சித்தார். அப்போது எதிர்பாரதவிதமாக தலைக்குப்புற கிணற்று சுற்றுப்பாரில் விழுந்து, பலத்த காயமடைந்த நிலையில் கிணற்றுக்குள் இருந்த தண்ணீரில் விழுந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு மீட்பு படை உதவியுடன் கிணற்றுகள் சடலமாக கிடந்த முருகேசனை மீட்டு ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

