புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு
X
லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். இந்நிலையில் அவா் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே பைக்கில் சென்றாா். அப்போது, ராயகிரியிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற வைக்கோல் லாரி அவா் மீது மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான கொல்லத்தைச் சோ்ந்த பிரதீப் (39) என்பவரைக் கைது செய்தனர்.
Next Story