தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

X
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட உழவன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார் இந்தநிலையில் பெரியசாமி நேற்று தனது விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார் இதில் படுகாயம் அடைந்த பெரிய சாமியை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியசாமி நேற்று மாலை உயிரிழந்துள்ளார் இது குறித்து அதியமான் கோட்டை காவலர்கள் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

