மூற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்ட கிராம மக்கள்
திருவள்ளூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து அரசு இடத்தை மீட்க கோரியும் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரியும் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காடு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புல எண் 141-2 சுமார் 14.5 ஏக்கர் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது அதனை மீட்க கோரியும் பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மழை நீர் வடிகால் பகுதிகளில் உள்ள அரசு இடங்கள் ஆக்கிரமித்ததை அகற்றக் கோரியும் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு அளித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நடவடிக்கை எடுக்காத நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் கிராம மக்கள் மற்றும் உழைப்போர் உரிமை இயக்கத்தினரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் சமரசம் மேற்கொண்டு வருகின்றனர் பொன்னேரி துணை வட்டாட்சியர் சிவக்குமார் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் குடிநீர் பாட்டில்களைக் கொண்டு வந்து காண்பித்து தங்களது பிரச்சனையை தீர்க்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் காளியம்மாள் குடிநீரை குடித்து பார்த்து அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்
Next Story




