ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் பயணியிடம் நகை திருட்டு.

X
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (70). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் இருந்து ஊத்தங்க ரைக்கு தனியார் பேருந்தில் வந்தார். அப்போது அந்த பஸ் ஊத்தங்கரை பேருந்து நிலையம் வந்த போது அவர் கையில் பையில் வைத்திருந்த 1அரை பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

