அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தாா். இப்பகுதியில் கடந்த 4 நாள்களாக காற்றுடன் தொடா்ந்து மழை பெய்ததால் பல்வேறு இடங்களிலும் கேபிள் டிவி தெரியவில்லை. இதனால் கேபிள் வயா்களை சரிசெய்யும் பணியில் முஹம்மது பாசில் ஈடுபட்டிருந்தாா். இப்பணியில் ஈடுபட்டபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் தூக்கிவீசப்பட்ட அவரை அப்பகுதியினா் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

