போச்சம்பள்ளி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

போச்சம்பள்ளி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேஉள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை இதே கிராமத்தைச் சார்ந்த மாரியப்பன் (45) என்பவர் அந்த பெண் கழிவறைக்குச் சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் தர்மபுரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாரூர் போலீசார், மாரியப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story