கோவில் அருகே பூஜை பொருள்களை வைத்து விட்டு சென்ற மக்கள்

X
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டுநீரைதான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவில் மரியாதை தருவது சம்பந்தமாக இரு தரப்பினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனிப்பட்ட நபர்களுக்கு ஜாதி அடிப்படையில் மரியாதை செய்யக்கூடாது என்று கூறியதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவுபடி யாருக்கும் மரியாதை செலுத்தாமல் திருவிழா நடத்த இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டு முளைப்பாரி வளர்க்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் மீண்டும் மரியாதை தர கோரி நீதிமன்றத்தின் வழக்கு தொடுத்தனர் அதனால் திருவிழாவை வேறொரு நாள் நடத்த ஆர் டி ஓ உத்தரவிட்டார். இதனால் திருவிழா தடைபட்டதால் வளர்க்கப்பட்ட முனைப்பாறி கிராமத்து பெண்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு குளததில் கரைத்தனர்.. மேலும் நேற்று (மே.29) நேர்த்திக்கடன் செலுத்த அக்னி சட்டி எடுப்பதற்காக வைத்திருந்த மண்சட்டி மற்றும் தேங்காய் வாழைப்பழம் பூக்கள் சூடம் பத்தி சாம்பிராணி உள்ளிட்ட பூஜை பொருட்களை நேத்திக்கடன் செலுத்த முடியாததால் கோயில் வளாகத்தில் கொண்டு வந்து பக்தர்கள் வைத்து வீட்டு வேதனையோடு சென்றனர்.
Next Story

