உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நல திட்டம் காணொளி மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இனுங்கூர் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தியாகராஜன் பங்கேற்பு
தமிழக வேளாண்மை துறை சார்பில் உழவர்களுக்கும் விவசாயிகளுக்கும் வேளாண்மை துறை என்றும் இணைந்து செயல்பட வழி வைக்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நல துறை திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக குளித்தலை வட்டாரத்தில் இனுங்கூர் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் முகாம் தொடக்க விழா நேற்று இனுங்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய சேர்மன் பொய்யாமணி தியாகராஜன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். குளித்தலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் குமரன் முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை கணேசன், அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைத்துறை திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு எப்பொழுதும் தமிழக அரசுடன் செயல்படும் வேளாண்மை துறை உடன் இணைந்து செயல்படும் அனைத்து துறைகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் அதனால் விவசாயிகளுக்கு அவ்வப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் நேரடியாக போய் சேர வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இது போன்ற முகாம்கள் நடத்தப்படுகிறது. அதனால் தொடர்ந்து நடைபெறும் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டங்கள் முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் இது போன்ற முகாம்கள் இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் அனைத்து கிராமப்புறங்களிலும் முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இம்முகாமில் கூட்டுறவு சார் பதிவாளர் மல்லிகா வேளாண்மை அலுவலர் மகேந்திரன், ,வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் சத்தியமூர்த்தி, கால்நடைத்துறை கால்நடை மருத்துவர் கிருஷ்ணன், இனுங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் அம்பிகா, வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பொன்னையா, தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் விஜய ரகுநாதன் உள்பட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் விவசாயிகளுக்கு நெல் உளுந்து விதைகள் தென்னங்கன்றுகள் பல்வேறு மரக்கன்றுகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டது.முடிவில் உதவி வேளாண் அலுவலர் அருள்குமார் நன்றி கூறினார்.
Next Story