வேளாண் இடுபொருட்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வேளாண் இடுபொருட்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
X
காளையார்கோவிலில் வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
தமிழக முதல்வரால் கானொலி காட்சி (Offline) வாயிலாக "உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, குருந்தனிவாரியேந்தல் கிராமத்தில் நடைபெற்ற ”உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் வேளாண்மைத்துறையின் சார்பில் பல்வேறு வகையான வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார். உடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், துணை இயக்குநர் (வேளாண் வணிக வேளாண்மை) தமிழ்செல்வி, உதவி இயக்குநர் (மாநில திட்டம்) மதுரைசாமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி உட்பட வேளாண்மை துறையை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்
Next Story