கோவை: விமான நிலையத்தில் கிடந்த பையால் பரபரப்பு !

கோவை: விமான நிலையத்தில் கிடந்த பையால் பரபரப்பு !
X
கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் நேற்று கேட்பாரற்று கிடந்த பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு அச்சத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்திய நிலையில், பையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை விமான நிலையத்திலும் தீவிர சோதனைக்குப் பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் அனாதையாகக் கிடந்த ஒரு பையைக் கண்ட சிஐஎஸ்எஃப் வீரர்கள் உடனடியாக உஷாராகினர். வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சத்தில், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு பையைச் சோதனையிட்டனர். பின்னர், அதை விமான நிலையத்தின் உள்ளே கொண்டு சென்று ஸ்கேன் செய்தனர். சோதனையில் பையில் எந்தவித சந்தேகப்படும்படியான பொருட்களும் இல்லை என்பது உறுதியானது. யாரோ ஒரு பயணி பையை மறந்து விட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், புகார் அளித்தால் திருப்பித் தருவதற்காக அதை எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story