சேலத்தில் பணியின் போது இறந்தவரின் தாயாருக்கு

சேலத்தில் பணியின் போது இறந்தவரின் தாயாருக்கு
X
ஓய்வூதியத்திற்கான ஆணை
இ.எஸ்.ஐ. காப்பீட்டாளர்கள், தொழில் சார்ந்த நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு ஏற்படும் போது, காப்பீட்டாளர்களின் சம்பளத்தில் இருந்து 90 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி ஓட்டல் ஸ்ரீ அன்னபூர்ணா என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்த சங்கர் வெங்கடாசலம் பணியின் போது நெஞ்சுவலியால் இறந்தார். இதையடுத்து அவருடைய தாயாருக்கு மாதம் ரூ.2 ஆயிரத்து 46 வழங்க இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலக இணை இயக்குனர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சேலம் இ.எஸ்.ஐ. கிளை மேலாளர் ஜெனோவா, இறந்த சங்கர் வெங்கடாசலத்தின் தாயாருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணையை வழங்கினார். இதில் நிறுவன உரிமையாளர் ஜெய்பாரத் கலந்து கொண்ட–ார்.
Next Story