மகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி தாய் போராட்டம்

மகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி தாய் போராட்டம்
X
சிவகங்கையில் இடைநீக்கம் செய்யப்பட்ட மகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி தாய் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சூடாமணிபுரத்தைச் சேர்ந்த விமலின் மகள் அமல இன்பென்சியா, தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பெற்று வந்தார். குடும்ப சூழ்நிலை மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரின் அழுத்தம் காரணமாக, பள்ளியை விட்டு விலக வேண்டிய நிலைக்கு அமலின் பெற்றோர் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மகளை மீண்டும் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றும், முழு ஆண்டு தேர்வு எழுத அனுமதித்து பத்தாம் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அமலின் தாயார் கண் கலங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். “கடந்த ஆண்டு முழுவதும் என் மகள் படித்தார்; வெறும் ஒரு மாதம்தான் பள்ளிக்கு செல்லவில்லை. அதற்காக டிசி கொடுத்து அனுப்பிவிட்டார்கள். மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்” என வலியுறுத்தினார். இது குறித்து அவர் பல்வேறு அதிகாரிகளிடம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகம் தரப்பில்கூறுகையில் : மாணவி 213 நாட்களில் வெறும் 57 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை தந்ததாகவும், முழு ஆண்டு தேர்வு எழுதவில்லை எனவும் அதனையடுத்து சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Next Story