கண்டமங்கலம் அருகே புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

X
கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளிநேலியனுார் திரவுபதியம்மன் கோவில் திடலில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.34 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது.ஊராட்சிமன்ற தலைவர் நாயகம்நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், ஊராட்சி துணை தலைவர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன் ஊராட்சி அலுவக கட்டடத்தை திறந்து வைத்தார்.மண்டல துணை பி.டி.ஓ., லாவண்யா, ஒன்றிய செயலாளர் செல்வரங்கம், அரசு வழக்கறிஞர் கோதண்டபாணி, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் முருகன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், ராமமூர்த்தி, சிவசக்தி தமிழ்குடி, ஊராட்சி செயலர் அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் திருமால் நன்றி கூறினார்.
Next Story

