விழுப்புரத்தில் புதிய வணிக வளாகம் திறப்பு

X
விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.36 கோடி மதிப்பில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 24 புதிய கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின், புதிய வணிக வளாக கட்டடத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் வசந்தி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் சக்கரை, வெற்றிவேல், துணை செயலாளர் புருஷோத்தமன், கவுன்சிலர்கள் மணி, ஜனனி தங்கம், சாந்தராஜ், வசந்தா அன்பரசு, கோமதி பாஸ்கர், பத்மநாபன், அன்சர்அலி, இம்ரான், வார்டு செயலர்கள் ஜானி, கோவிந்தராஜ், குமரன், மணிவண்ணன், சுரேஷ்பாபு, மாவட்ட வர்த்தகரணி வெங்கடேசன், தொழிலாளரணி ராஜா, முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், ரபீதீன், பாண்டு உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story

