பிரான்மலையில் வேளாண் பிரச்சார இயக்கம் நடைபெற்றது

X
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் " வளமான விவசாயி நாட்டின் பெருமை என்ற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்" தொடங்கப்பட்டது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகமும், மாநில வேளாண் துறையும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக விஞ்ஞானி டாக்டர் ஆறுமுகநாதன் மற்றும் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் "பருவநிலை மாற்றம் மற்றும் விவசாயத்தில் முன்னெடுக்க வேண்டிய உத்திகளும், அதன் அவசியங்களையும் எடுத்துரைத்தனர். முன்னதாக குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டாக்டர்.செந்தூர்குமரன் பாரதப் பிரதமரின் விவசாய திட்டங்கள் குறித்தும் அதன் பயன்களும் எவ்வாறு இணைய வேண்டும் என்பது குறித்த விளக்கத்தை விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் ஊட்டச்சத்து மருந்தினை தெளிப்பது குறித்த செயல்முறை விளக்கம் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story

