கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்
X
மதுரை மேலூர் அருகே கல்லூரி மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பூக்குளத்தை சேர்ந்த மாரிமுத்து, மீனாள் தம்பதியரின் மகள் ஷாலினி( 19) என்பவர் இ. மலம்பட்டியிலுள்ள மீனாளின் சகோதரி வீட்டில் தங்கியிருந்து திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மே.28) மலம்பட்டியிலுள்ள வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் மீனாள் நேற்று (மே.29) கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி தேடி வருகின்றனர்.
Next Story