தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி நொச்சிக்குளத்தை சேர்ந்த மலையாள பகவதி (59) என்பவரின் மனைவி கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக காலமாகிவிட்டார்.இந் நிலையில் விவசாய கூலி வேலை பார்த்து வந்த இவர் மதுவுக்கு அடிமையானதால் இவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்தது. இந்நிலையில் இவர் நேற்று (மே.29) காலை 11 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

