கோவை: பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றம் –ராஜ்குமார்

மோப்பேரிபாளையம் பேரூராட்சியில் ரூ.1.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய வாரச்சந்தையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.
கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எம்.பி. கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். மோப்பேரிபாளையம் பேரூராட்சியில் ரூ.1.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய வாரச்சந்தையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் எம்.பி. கணபதி ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த வாரச்சந்தை, கோவையில் முன்மாதிரி சந்தையாக உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. நிகழ்வில் பேசிய எம்.பி., அடித்தட்டு கவுன்சிலர்கள் பணமின்றி சேவை செய்வதை புகழ்ந்ததுடன், தனது நாடாளுமன்ற நிதியிலிருந்து கோவையின் கல்வி மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
Next Story