பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
X
கட்டுமான தொழிலாளர்கள் கூடும் இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் அதிகமானோர் கூடும் இடமாக 2ம் கேட் அருகே பத்திர காளியம்மன் கோவில் அருகே மற்றும் வி இ ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் கூடுகிறார்கள்.... அவ்வாறு அங்கு கூடும் கட்டிட தொழிலாளர்கள் ஆண், பெண் இருவரும் அங்கிருந்து தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிக்கு செல்கின்றனர்... ஆனால் அவர்கள் கூடும் இடங்களில் அவர்களுக்கு கழிப்பிட வசதி என்பது இல்லாமல் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்தப் பகுதியில் கழிப்பிட வசதியை செய்து தரகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநகர செயலாளர் முத்து தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகம் கழிப்பிட வசதி செய்து தரக் கோரி கோஷங்களை எழுப்பினார்கள். மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் என மாநகரச் செயலாளர் முத்து தெரிவித்தார்.
Next Story