இந்திய ராணுவ வீரர்களுக்கு சூலூரில் வெற்றிப் பேரணி - பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்பு !

ஆபரேஷன் சிந்தூர் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைப் போற்றும் விதமாக, கோவை மாவட்டம் சூலூரில் மாபெரும் வெற்றிப் பேரணி நடைபெற்றது.
ஆபரேஷன் சிந்தூர் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ மற்றும் விமானப்படை வீரர்களைப் போற்றும் விதமாக, கோவை மாவட்டம் சூலூரில் நேற்று மாபெரும் வெற்றிப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் முன்னாள் விமானப்படை வீரர்கள், பாரதிய ஜனதா கட்சியினர், அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். காங்கேயம்பாளையம் ஐயப்பன் கோவிலில் தொடங்கிய இந்த ஊர்வலம், காடம்பாடியில் உள்ள விமானப்படைத் தளம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. பேரணியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, பாஜக மாவட்ட தலைவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விமானப்படைப் பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டனர். விமானப்படைத் தளத்தை அடைந்ததும், பேரணியில் பங்கேற்றோர் விமானப்படை அதிகாரிகளிடம், போரில் அரும்பங்காற்றிய வீரர்களைப் போற்றும் விதமாக மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, இந்திய நாட்டிற்காக பாடுபடக்கூடிய தலைவர் பிரதமர் மோடி. போர்முனைக்கு மோடியும், ஏர்முனைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளதால் நாடு செழித்து விளங்கும் என்று தெரிவித்தார். மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை வருகை தந்ததாகவும், அவரை வரவேற்கச் செல்ல வேண்டுமா என்று தான் கேட்டபோது, பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று கட்டளையிட்டதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய தேசிய செயற்குழு உறுப்பினர் ஜிகே செல்வகுமார், போரில் தன்னலம் கருதாது போரிட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும் இந்தப் பேரணி நடைபெற்றது என்று குறிப்பிட்டார். மக்கள் ராணுவத்திற்கு உறுதுணையாக இருப்பதற்கு இது ஒரு சான்று எனவும் அவர் தெரிவித்தார்.
Next Story